தல அஜித் சமீப காலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தபட்டுள்ளது.
அதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார்கள். இருப்பினும் இப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வராதா என ஏங்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மே 1 அஜித் பிறந்த நாளன்று வலிமை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வராதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும். மே1 அன்று பிறந்தநாளை வெகுவாக சிறப்பிக்க பல நடவடிக்கைகளை அஜித் ரசிகர்கள் எடுத்து வருகின்றனர்.அவ்வகையில் ரசிகர்கள் 14 பெரிய பிரபலங்களுடன் சேர்ந்து கொண்டாடயிருகின்றனர்.
ரசிகர்கள் சும்மாவே ட்விட்டரில் அஜித்தை ட்ரெண்டிங் ஆக்குவதே வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது அஜித்தின் பிறந்தநாள் அதற்கு முன்பாகவே சமூகவலைதளத்தில் அஜித்தின் ஹஷ்டாக் வைத்து ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். ஆனால் இந்த முறை அது மட்டுமில்லாமல் வேறு ஒரு திட்டத்தையும் செய்யவுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் காமன் டிபியாக அஜித்தின் ஒரு புகைப்படத்தை அனைவரும் வைக்க உள்ளனர். பிரபலங்கள் ஹன்சிகா, அருண்விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல்தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரைசன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், கீர்த்தி சாந்தனு ஆகியோர் 14ஆம் தேதி சாயங்காலம் 5 மணிக்கு இந்த காமன் டிபி வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதே நேரத்தில் அஜித்தின் பிறந்த நாளன்று வலிமை படத்திலிருந்து ஏதேனும் அப்டேட் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு இது தான் இருப்பினும் இந்த நிலையில் மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட வேண்டுமா என்று அஜீத் யோசித்துக் கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்ட பின்னர் பொங்கலுக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.