Thala Ajith’s Birthday famous tv telecast ajith interview: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் கொண்டவர்களில் ஒருவராக உள்ளவர் தல அஜித். தல அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்வு செய்து அதில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு நடித்து வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது ஹச்.வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் அதனைக்கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அஜித் அவர்கள் இத்தகைய சூழலில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது அவ்வளவு நன்றாக இருக்காது என கூறிவிட்டார் இதனையடுத்து அது தடைசெய்யப்பட்டது. ஆனால் மேலும் அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அஜித்தின் பிறந்தநாளை சோகத்துடன் இருக்க கூடாது என்பதற்காக ஜெயா டிவி தொலைக்காட்சி அஜித்தை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. அது வேறு எதுவும் இல்லை பில்லா படத்திற்கு பிறகு தல அஜித் அவர்கள் சந்தானத்திடம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சற்று சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை அஜித்தின் பிறந்தநாளன்று மறக்காமல் பாருங்கள். இந்த நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்களின் பல்வேறு கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.