தல அஜித் தற்பொழுது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது டெல்யை சுற்றியுள்ள பகுதியில் நடக்கப்போகிறது என சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியது.
மேலும் தல அஜித் ஹைதராபாத்தில் படப்பிடிப்பின்போது அங்கு பைக்கில் வீலிங் செய்த புகைப்படங்கள் ஒரு சில நாட்கள் முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்தது.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் வெலிவந்த திரைப்படம் தான் பசங்க இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல பிரபலங்கள் தற்போது சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.
மேலும் இந்த திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்த இருவரில் ஒருவர்தான் ஸ்ரீராம் இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.
இதையடுத்து பசங்க திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்,ஸ்ரீராம் ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.