சினிமாவை பொறுத்தவரை படங்களில் கமிட் ஆவதற்கு முன்பாகவே சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக கணிக்க வேண்டும் அதை செய்யவில்லை என்றால் நீங்கள் எத்தனை ஹிட் படங்களை கொடுத்தாலும் காணாமல் போய் விடுவீர்கள்.
அதை ஆரம்பத்திலேயே புரிந்து அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு தற்போது வரையிலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருப்பவர் தான் தல அஜித். அஜித் எப்போதும் இயக்குனர்களை நம்பியே படத்தைக் கொடுப்பார். அப்படித்தான் இதுவரை இருந்துள்ளன அதுபோலவேதான் எச் வினோத்துடன் இரண்டாவது முறையாக அவரை நம்பி வலிமை என்னும் பட வாய்ப்பை கொடுத்துள்ளார்.
இந்த படத்தை இரண்டு வருடங்களுக்கு மேலாக எடுத்து வந்த இயக்குனர் ஒருவழியாக சமீபத்தில் அதை முடிவுக்குக் கொண்டு வந்தார். இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் வெற்றிகரமாக முடிந்தது அதை தொடர்ந்து அஜீத் தன்னை கொஞ்சம் ப்ரீயாக வைத்துக் கொள்ள தற்போது ஊர் சுற்றி வருகிறார்.
முதலில் ரஷ்யாவில் இருந்து 5,000 கிலோ மீட்டர் பயணித்து அஜித் அதன் பிறகு இப்போது தாஜ்மஹால் சென்று அங்கு சிறுவர்கள் மற்றும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த புகைப்படங்களும் வெளியாகின. இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத் சமீபத்தில் பைக் ரேஸ் போட்டி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு அளித்து வருகின்றார்.
தர்பொழுது தல அஜித்தை பார்க்க வந்த ரசிகர் ஒருவரை நடிகர் அஜித் அன்போடு கட்டித்தழுவும் அழகிய வீடியோ ஒன்று கசிந்துள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தல தல தானே எனக்கூறி புகழோடு இது போன்று நாமும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
Latest video of Thala #Ajith sir.
| Video: karthi | #Valimai | #Ajithkumar | #BikeRide | pic.twitter.com/djQ6WnlxAe
— Ajith | Valimai | (@ajithFC) September 19, 2021