தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் மோகன் ராஜா. இவர் ‘அனுமன் ஜங்ஷன்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனைத் தொடர்ந்து அவர் தனது தம்பி ரவியை வைத்து ஜெயம் என்ற படத்தை 2003 இல் எடுத்தார் இப்படம் மிகப்பெரிய வெற்றி மாறியது அதுமடுமில்லமால் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் அவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம் போன்ற படங்களை இயக்கிய மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் இயக்கிய பாதி படங்கள் டப்பிங் என்பதால் இவரை தவறாக சித்தரித்தனர். இதனை உணர்ந்த மோகன் ராஜா அவர்கள் சிறந்த கதையை ஒன்றை உருவாக்கி அதில் அவரது தம்பியான ஜெயம்ரவியை ஹீரோவாக போட்டு மிகப்பெரிய வசூல் படமாக ஒரு மாற்றினார் மோகன்ராஜா அந்த படமே தனி ஒருவன்.
இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இப்படம் சுமார் ரூ105 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இப்படத்தின் மொத்த பட்ஜெட் 20 கோடி தானாம். தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம். இந்த படம் உருவாக முக்கிய காரணம் தல அஜீத்.
தல அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அவர்கள் நெகடிவ், ஹீரோவாக நடித்து அசத்தினார் இதனால் தான் இன்ஸ்பிரேஷன் ஆனார் அதனாலையே இதனைப் போன்று கதை எழுத அவர் திட்டமிட்டார் என கூறியுள்ளார் மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை முதலில் அஜீத்தை வைத்து தான் கதை எழுதினார் ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அதனைத்தொடர்ந்து அரவிந்த்சாமி கதாபாத்திரத்திற்கு கைமாறியது என பேட்டி ஒன்றில் மோகன்ராஜா கூறியிருந்தார்.