சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி மிகவும் வரவேற்பைப் பெற்றது.
இந்த போஸ்டரை பல பிரபலங்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் வலிமை பட போஸ்டரை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளதை பார்த்து பல ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள்.
இயக்குனர் எச் வினோத் அவர்கள் விசுவாசம் திரைப்படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்த அதே டீம் தற்பொழுது வலிமை திரைப்படத்திலும் இணைந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த நிலையில் திரைப்படத்திற்கான பெயரைத் தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. நீண்ட மாதங்களுக்குப் பிறகுதான் வலிமை அப்டேட் வரத்தொடங்கியுள்ளது.
அதாவது கடந்த மே மாதம் 1ஆம் தேதி தல அஜித் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு திரைப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியானது. ஆனால் கொரோனாவின் பிரச்சினை காரணமாக அந்த தேதியும் தள்ளி போனது.
அந்த வகையில் ஜூன் மாதம் 25ஆம் தேதி திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத அளவிற்கு திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பலரும் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வலிமை திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பதிவிட்டிருந்தார்.
அதில் வலிமை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக valamai என்று பதிவிட்ட காரணத்தினால் பல ரசிகர்கள் இவரை கேலி செய்து வருகிறார்கள். வலிமைக்கு கூட ஸ்பெல்லிங் தெரியல என்று கேலி செய்து வருகிறார்கள்.
மேலும் இந்த பதிவைப் பார்த்த பல ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.