ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய தல அஜித்..! தாங்குமா தயாரிப்பு நிறுவணம்..?

ajith-1
ajith-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தல அஜித் இவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் இவருடைய திரைப்படம் வெளிவந்தாலே தியேட்டரில் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் நமது நடிகருக்கு தமிழ்மொழி மட்டும் இல்லாமல் இதர மொழிகளிலும் பல்வேறு ரசிகர்கள் உருவானது மட்டுமல்லாமல் தற்போது பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் தல அஜித் ஒரே இயக்குனரின் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வருவதாக  பலர் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் வீரம் வேதாளம் விவேகம் போன்ற திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து இருந்தார் இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை மற்றும் தற்போது வலிமை ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் இன்னொரு திரைப்படத்திலும் வினோத் இயக்கத்தில் இவர் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படங்கள் அனைத்தையும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தான் தயாரித்து வருகிறார்.இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்பு ஆனது இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை என்பது உறுதியாகி உள்ளது இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக படக்குழுவினர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தல அஜித்திற்கு முதலில் 55 கோடி வரை சம்பளம் பேசப்பட்டது ஆனால் திரைப்பட படப்பிடிப்பு வெகு நாட்கள் நீடித்ததன் காரணமாக தல அஜித்தின் சம்பளம் 70 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

valimai-1
valimai-1