நீங்க எல்லாம் இப்ப தான் செல்பி எடுக்குறீங்க.! ஆனால் தல அஜித் 15 வருடத்திற்கு முன்பே செல்பி எடுத்துள்ளார்.! வைரலாகும் புகைப்படம்

ajith-tamil360newz
ajith-tamil360newz

Ajith selfie : அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தனக்கான மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருந்தார், ஆனால் ரசிகர்களின் நலனுக்காக ரசிகர் மன்றத்தையே கலைத்தார். தல அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் முட்டி மோதி தன்னுடைய அயராத உழைப்பால் தற்பொழுது ஆலமரமாக வளர்ந்து இருக்கிறார்.

தற்பொழுது தான் உதவி செய்ததை சொல்லி விளம்பரம் தேடும் பிரபலங்களுக்கு மத்தியில், அஜித் தான் செய்யும் உதவி யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக் கொள்வார், தல அஜித் வீடு விட்டால் ஷூட்டிங், ஷூட்டிங் முடிந்தால் டப்பிங் என தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் நேரத்தை செலவிடுவார்,

இந்த நிலையில் தற்போது அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என்றும் பைக் ரேஸ், கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள்  வரை அனைவரும் செல்பி எடுப்பது வழக்கமாக இருக்கிறது, ஆனால் தல அஜித் 15 வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு விழாவில் செல்பி எடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சொல்லப்போனால் தமிழ் நடிகர்களில் ஆப் ஸ்கிரீன்னில் முதல் முதலாக செல்பி எடுத்தது தல தான் என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ajith selfie photos-tamil360newz
ajith selfie photos-tamil360newz