அஜித்தின் மங்காத்தா மற்றும் ஜனா படத்தில் இருந்த காட்சியை லாக் டவுன் வீடியோவாக வெளியிடும் ரசிகர்கள்.! வைரல் வீடியோ இதோ.

mankatha-tamil360newz
mankatha-tamil360newz

Actor ajith mankatha movie video: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். அஜித் அவர்களின் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். தல அஜித் சமீபகாலமாக தனது சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடித்த விசுவாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.அதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு வெளியாகும் என்று செய்தி பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட காவல் துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருங்கள்… பயந்துக்கிட்டு இல்ல… பாதுகாப்பாக இருங்கள்.. என ஸ்டேட்டஸ் உடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் தல அஜித் அவரின் ஜனா படத்திலிருந்து அவர் பேசிய வசனத்தையும் மற்றும் மங்காத்தா படத்தில் அஜித் வீட்டிலேயே உள்ளது போன்ற வீடியோவையும் எடிட் செய்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.