தமிழ்சினிமாவில் பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அதுபோல வருகின்ற 28 ஆம் தேதி பல படங்கள் வர உள்ளன. குறிப்பாக நாம் ஒரு படத்தையே பார்க்க உள்ளோம் ஏனென்றால் இன்று மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ள படம் திரௌபதி.
இப்படத்தை மோகன்ஜி அவர்கள் இயக்குகிறார். இதற்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹீரோவாக ரீச்செட் அவர்கள் நடிக்கிறார். படத்தின் கதை நாடக காதலை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் எகிறியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மோகன்ஜி அவர்கள் அஜித் அவர்களைப் பற்றி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியீட்டு உள்ளார்.
அது என்னவென்றால் நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என்று அஜித் அவர்கள் இதற்கு முன்பு பலரிடம் கூறியிருந்தார். அதுபோல தற்போது நடந்துள்ளது என்று மோகன்ஜி கூறியுள்ளார். நாங்கள் திரௌபதி படத்திற்கு குறைந்த அளவிலேயே ப்ரோமோஷன் செய்திருந்தோம். தற்போது அஜித் அவர்கள் சொன்னதுபோலவே நடந்து உள்ளதால் தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் மேலும் இப்படம் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
ஒரு நல்ல படம் தன்னை தானே விளம்பரபடுத்தி கொள்ளும் – தல சொன்னது.. ? ? ? ? இப்ப எனக்கு நடக்குது.. ? ? ? ? #திரெளபதி pic.twitter.com/r4x1udiYbM
— Mohan G ?? (@mohandreamer) February 27, 2020