தளபதியின் இந்த ஹிட் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை தல அஜித் தான் முதன் முதலில் பார்த்தாராம்.! இதோ இயக்குனரே கூறிய தகவல்

ajith-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் விஜய். இவர் தனது நடிப்புத் திறமையினால் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் பற்றிய பல அப்டேட்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. விஜய் நடிப்பில் திரைக்கு ரிலீசாகும் படங்கள் சில பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் ரிலீஸ் ஆகி வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று.

இந்த வகையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரைக்கு வந்த திரைப்படம் தலைவா திரைப்படத்தை ஏஎல் விஜய் அவர்கள் இயக்கியிருந்தார்.

இனதைக் குறித்து தற்பொழுது ஏ எல் விஜய் அவர்கள் இத்திரைப்படத்தில் ரிலீஸின் போது முதலில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர் தல அஜித் தான் என்றும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை முதலில் கேட்டவர் தல அஜித் தான் என்ற செய்தியையும் கூறியுள்ளார்.

இந்த தகவல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

vijay and ajith
vijay and ajith