Ajith : தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், இவர் வசூல் மன்னனாக வலம் வருகிறார், சமீப காலமாக அஜித்தின் திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்று வருகிறது, இந்தநிலையில் அஜித்தை எந்த ஒரு பொது நிகழ்ச்சி டிவி நிகழ்ச்சி என எதிலும் காண முடியவில்லை.
ஆனால் ஒரு காலத்தில் அஜித் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்தான், அவருக்கு நடந்த சில கசப்பான சம்பவங்களால் தான் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, அஜித் ஆரம்ப காலத்தில் ஆனந்தபூங்காற்றே படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் மீனாவுடன் மேடையில் ஆடுவதற்கு அஜித்தை தொகுப்பாளர்கள் அழைத்தார்கள். ஆனால் மீனாவின் அம்மா என்னுடைய மகள் ரஜினி கமலுடன் ஜோடி போட்டு நடித்தவர் உன்னுடன் ஆடினால் சரியாக இருக்காது என கூறிவிட்டாராம்.
அதனால் அஜித்தும் கொஞ்சம் அப்செட் ஆனார், இந்த செய்தி அப்பொழுது பல பத்திரிக்கைகளில் பரபரப்பாக பேசப்பட்டது, ஆனாலும் இந்த சம்பவத்திற்கு பிறகு அஜித் பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார், ஏன் கலைஞர் நடத்திய விழாவில் கூட தன்னுடைய தரப்பு வாதத்தை மிகவும் தைரியமாக மைக் பிடித்து பேசியவர் அஜித்.
இந்தநிலையில் அஜித் ஏன் வீட்டை விட்டு வெளியே அதிகம் வரவில்லை என்ற காரணத்தை அஜித்துடன் பைக் ரேஸ் ஓட்டிய பெண் பைக் ரேஸ் ஒருவர் கூறியுள்ளார், இது அஜித் ரசிகர்களை அஜித் மீது இருக்கும் மரியாதையை இன்னும் அதிகரித்துள்ளது.
தல அஜித் வருகிறார் என்று தெரிந்தவுடன் வெயில், இரவு, பகல் என பாராமல் ரசிகர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து அஜித் அதிகமாக வெளியில் தலை காட்டுவதில்லை என கூறியுள்ளார்,
இந்தப் பெண் பைக் ரேஸர் அஜித்துடன் ஒருமுறை பைக் ரேஸில் கலந்து கொள்ள சென்ற பொழுது அஜித்தை பார்க்க ஒரு மிகப் பெரிய கூட்டம் கூடியதாகவும் அதனால் வருத்தப்பட்ட தல அஜித் தன்னிடம் இதுபோல் கூறியதாகவும் பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா கூறியுள்ளார்.