Thala ajith movies which earned more than 100 crores movies list: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தல அஜித், இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்தளவு ரசிகர்கள் பாலாபிஷேகம், கட் அவுட் வைத்து கொண்டாடுவார்கள்.
தற்பொழுது அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் வலிமை திரைப் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது, தல அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை தானுண்டு தன் வேலையுண்டு என தனக்கான வழியிலேயே செல்வார்.
தனக்காக யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற கட்டுப்பாட்டில் உறுதியாக இருப்பார், அதேபோல் அஜித்தின் திரைப்படம் புரமோஷன் இல்லாமல் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வசூலை பெற்று வருகின்றது.
இதனாலேயே அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.
ஆரம்பம், வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் அஜித் திரைப்பயணத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் ஆகும்.