தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் இவர் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் இவருக்கு மட்டும் ரசிகர் பட்டாளம் எப்படி உருவானது என மற்ற மொழி நடிகர்களும் யோசித்து யோசித்து மண்டையை பிச்சி கொள்கிறார்கள் அந்த அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார் தல அஜித்.
அதேபோல் தல அஜித்தின் ஒவ்வொரு திரைப்படமும் திரைக்கு வரும் பொழுது திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும் அந்த அளவு இவர்களது ரசிகர்கள் பாலாபிஷேகம் கட்டவுட் என அமர்க்களப் படுத்துவார்கள், கடந்த வருடத்தில் நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடைந்தது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் கொரோனா காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, அதனால் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் 2020இல் வாய்ப்பில்லை என பலரும் பேசுகிறார்கள், இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் திரைப்படம் ஒரு வருடத்திற்கு ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தல அஜித் அடுத்த படத்திற்கான கதை தேர்வில் மும்மரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் அஜித்திற்கு ஒரு செம வாய்ப்பு ஒன்று அமைந்துள்ளது, கமலஹாசன் சிவாஜி கணேசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய தேவர் மகன் திரைப்படம் சக்கைபோடு போட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித்தை வைத்து தேவா்மகன் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார் அந்த போஸ்டர் கமலஹாசனை வெகுவாக கவர்ந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனால் தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் நடிக்க தயாராகி வருவதாக சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது, இந்த நிலையில் கமலஹாசனின் தற்போதைய சூழ்நிலையை கருதி இனி அந்த திரைப்படத்தில் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது அதனால் அந்த கதையை தல அஜித்தை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இயக்கலாம் என கமலஹாசன் ஐடியா செய்து வருவதாக தெரிகிறது.
அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தல அஜித் தான் சரியாக இருக்கும் எனவும் அவரது வட்டாரங்களில் கூறுகிறார்களாம் அப்படி ஒன்று மட்டும் நடந்தால் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத அளவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தல அஜித் அவர்கள் கொடுப்பார் என கூறுகிறார்கள் அஜித் வட்டாரங்கள்.