தல அஜித் நடிப்பில் துரை இயக்கத்தில் 2000 ஆண்டு வெளியாகிய திரைப்படம் முகவரி இந்த திரைப்படத்தில் அஜித்குமார், விஸ்வநாத், விவேக், மணிவண்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தார்கள் படத்திற்கு தேவா தான் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் துரை முகவரி திரைப்படத்தில் ஜோதிகா எப்படி உள்ளே நுழைந்தார் என்ற தகவலை தற்பொழுது கூறியுள்ளார்.
அதாவது முகவரி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நெஞ்சினிலே திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த இஷா கோபிகர் தான் முகவரி திரை படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனார். அதேபோல் ஷூட்டிங்கில் நான்கு நாட்களாக கலந்துகொண்டுள்ளார் பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கும் கொஞ்சம் கூட சேட் ஆகாததால்.
உடனே கதாநாயகியை மாற்ற வேண்டுமென தயாரிப்பாளரிடம் அதிரடியாக வேண்டுகோள் விடுத்தார் இயக்குனர் துரை. அதன்பிறகு ஜோதிகாவை வைத்து முகவரி திரைபடத்தின் முதல் நாள் சூட்டிங் நடைபெறும் பொழுது தயாரிப்பாளர் பார்த்துள்ளார் உடனே இயக்குனர் துறையின் முடிவு சரிதான் என பாராட்டியுள்ளார்.
ஜோதிகாவும் முகவரி திரைப்படத்தில் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்தார். இந்தா திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இஷா கோபிகர் முகவரி திரைப்படத்தை மிஸ் செய்து விட்டார் என்றே கூற வேண்டும். அந்த அளவு இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.