தல அஜித் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பாடிய பாடல்.! எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

ajith
ajith

kamal singing song in ajith movie : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் நடிக்க வந்து 61 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி கொட்டித் தீர்த்தார்கள், அதனால் சமூகவலைதள முழுவதும் கமலஹாசனை பற்றிய பதிவுதான், பல பிரபலங்களும் 61 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை பற்றி பல்வேறு கருத்து தெரிவித்தார்கள்.

தற்பொழுது நடிகர் கமலஹாசன் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார், சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார், இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் இறங்கிவந்து அஜித்திற்கு ஒருவேளை செய்துள்ளார் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமாவில் தற்பொழுது மிகப்பெரிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர், இவர் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், அதேபோல் அஜித்தின் திரைப்படத்தின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது, அதுமட்டுமில்லாமல் வசூலிலும் கல்லா கட்டி வருகிறார்..

தல அஜித் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தமிழ் தெரியாதா நடிகராக தான் இருந்தார் அஜித்திற்கு பல நடிகர்கள் டப்பிங் பேசி உள்ளார்கள், இந்த நிலையில் தல அஜித் நடித்த உல்லாசம் திரைப்படத்தில் தான் கமல் ஒரு பாடலை பாடியுள்ளார், இந்த தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். ஆனால் இந்த தகவல் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

உல்லாசம் திரைப்படத்தை அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார் அந்த திரைப்படத்தில் ‘முத்தே முத்தம்மா’ என்ற பாடலை கமல்தான் பாடினார் இந்த பாடல் ஹிட்டடித்தது ஆனால் உல்லாசம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்த திரைப் படத்தில் அஜித்துடன் இணைந்து விக்ரமும் நடித்திருப்பார்.