தமிழ் சினிமாவில் கொண்டாடித் தீர்க்கும் நடிகர் என்றால் தல அஜித் தான் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது அதே போல் தல அஜித்தின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும்.
தல அஜித்தை தற்போது உச்ச நடிகராக இருந்தாலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார், பல தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் படிப்படியாக தனக்கான இடத்தை பிடித்தவர்.
படிப்படியாக உச்சத்தை அடைந்த அஜித் அவர்களை சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் பிடிக்கும், இந்த நிலையில் அஜித் அவர்கள் ஒரு பேட்டியில் தற்பொழுது உள்ள நடிகர்களில் அதிக தோல்வி திரைப்படங்களை கொடுத்தவர் நான்தான் என அவரே கூறியுள்ளார்.
அஜித் அவர்கள் தன்னுடைய தோல்வியை வெளிப்படையாக கூறி அதை வெற்றி படியாக மாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், அதனால்தான் அஜித் பின் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, நேர்மையான பேச்சு சக மனிதர்களை மதிக்கும் பண்பு, ரசிகர்கள் மீது அளவு கடந்த பாசம், கேட்காமலே அள்ளி அள்ளி கொடுக்கும் குணமுடையவர். இப்படி அஜித்தை சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்தநிலையில் அஜித் அவர்கள் கொடுத்த தோல்வி திரைப்படங்களை இங்கே காணலாம்.
பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே, பவித்ரா, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு, உயிரோடு உயிராக, உன்னை கொடு என்னை தருவேன், ரெட், ராஜா, ஜி, ஜனா, ஆழ்வார், ஏகன், அசல், பில்லா 2, விவேகம் ஆகிய திரைப்படங்கள் அஜித் திரைப்பயணத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.