thala ajith latest news: தமிழ் திரை உலகில் இன்று மிக பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகர்களும் தன்னுடைய இளமைப்பருவத்தில் பல்வேறு தவறுகளை செய்து உள்ளார்கள். இவ்வாறு அவர்களை பற்றிய தகவல்கள் தற்போது தெரியும் போது பதறும் படி இருந்து வருகிறது.
தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட நடிகராகவும் ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களின் கனவு கண்ணனாகவும் இருந்து வருபவர் தான் தல அஜித். இவரை அனைவரும் ஜென்டில்மேன் என ஆசையாக அழைப்பார்கள்.
இப்படிப்பட்ட நமது தல அஜித் ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் 6 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு தராமல் வெகுகாலமாக ஏமாற்றிக்கொண்டு இருக்கிறாராம் கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகும் என தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்தவர் தான் செவன்த் சேனல் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். இவரிடம் தல அஜித் தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற காரணத்தினால் 5 லட்சம் ரூபாயை கடனாக பெற்று உள்ளாராம்.
அதன் பிறகு அஜித்தை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க பார்த்தாராம் ஆனால் தல அஜித் அவருடைய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கடன் தர வேண்டும் என கூறியதன் காரணமாக 7 லட்சம் ரூபாயை அட்வான்ஸாக பெற்றாராம்.
ஆனால் இவர் நடிக்க இருந்த திரைப்படம் பாதியிலேயே நின்றுபோனதன் காரணமாக அந்த தயாரிப்பாளர் தல அஜித்தின் அட்வான்சை திருப்பி கேட்டுள்ளார் ஆனால் தல அஜித் தன்னுடைய மேனேஜரை வைத்துக்கொண்டு பிஸியாக இருப்பது போல் அவரை கூற சொல்கிறாராம்.
தற்போது தல அஜித் சுமார் 50 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் ஆனால் இன்று வரை அந்த ஆறு இலட்சம் ரூபாயை திரும்பி தர தோனவில்லை என அந்த தயாரிப்பாளர் கூறியுள்ளார்.