thala ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் தல அஜித் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது அந்தளவு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். சமீபகாலமாக அஜித் மெகாஹிட் திரைப்படங்களை கொடுத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அதுமட்டுமில்லாமல் அஜித்தின் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் செய்வதில் அதிக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள், இந்த நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார்.
ஊரடங்கு அமலில் இருந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வலிமை படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படி இருக்கும் நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படத்தை கேவலப்படுத்திய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம், விசுவாசம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம் இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றி என பல விநியோகஸ்தர்கள் கூறினார்கள், அதுமட்டுமில்லாமல் விசுவாசம் திரைப்படம் குடும்ப பாங்கான திரைப்படமாக அமைந்ததால் ஒட்டுமொத்த குடும்பம் முழுவதும் பார்க்கும்படி அமைந்தது.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் விசுவாசம் திரைப்படத்தின் கன்னட ரீமேக் செய்ய ஆசைப்பட்டு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரிடம் படத்தை காட்டியுள்ளார்கள். அதை பார்த்த சிவராஜ்குமார் இதெல்லாம் ஒரு படமா என அசிங்கப்படுத்தி விட்டாராம் இது தல ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி உள்ளது. இதனை பிரபல யூடியூப் சேனல் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.