புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு தல அஜித் என்ன உதவி செய்தார் தெரியுமா.!

thavasi

thala ajith helped thavasi information viral: கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் தவசி.

இவர் சமீபகாலமாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் கொம்பன், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவ்வாறு நடித்து வந்த தவசி சமீபகாலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இவர் சமூக வலைதளப்பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ காணொளியில் நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருவதாகவும் எனக்கு இப்படி ஒரு நோய் ஆண்டவன் கொடுப்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

என்னிடம் போதிய பணம் இல்லாததால் சிகிச்சை பெறுவதற்கு சினிமாவில் உள்ள சக கலைஞர்கள் எனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இவர் வைத்திருந்த வேண்டுகோளை பார்த்த சிவகார்த்திகேயன் 25,000 ரூபாயும் சூரி 20,000 ரூபாயும் உதவி செய்திருக்கிறார்கள்.

அதேபோல மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒரு லட்சம் கொடுத்து அவருக்கு போனில் ஆறுதல் கூரியிருக்கிறார்.

மேலும் தவசி வெளியிட்டிருந்த வீடியோவை பார்த்த தல அஜித் தவசிக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். ஆனால் தல அஜித் கொடுத்த உதவி இணையதளத்தில் அவ்வளவு சீக்கிரம் வெளியாகவில்லை. தற்பொழுது தல அஜித்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.