பிரபல நடிகரின் மகனை பத்தாவது வரை படிக்க வைத்த அஜித்.! இதை என்றைக்கும் மறக்க மாட்டேன் நடிகர் அதிரடி.

ajith
ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித், தமிழகம் முழுவதும் தனக்கான ரசிகர் கூட்டத்தை கலைத்த பின்னரும் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்து வருகிறார் போனிகபூர் படத்தை தயாரித்து வருகிறார், தல அஜித் எப்போதும் வெளியே தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், அதாவது அசல் திரைப்படத்தில் வரும் வசனம் அஜித்திற்கு பக்காவாக பொருந்தும், யார் சொன்னாலும் கேட்க மாட்டான் தனக்கு சரி என்று பட்டால் அது தப்புனுநாளும் அதை சரியா பண்ணுவான் என சம்பத் சொல்லும் அந்த வசனம் அவருக்கு கச்சிதமாக பொருந்தும்.

இந்த நிலையில் பிரபல துணை நடிகர் மாரிமுத்து அவர்கள் அஜீத்துடன் அவர் இருக்கும் நட்பை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், எல்லோரும் நல்லவர்கள் நல்லவர்கள் என நம்ம ஆளு சொல்லுவார்கள் ஆனால் உண்மையாகவே மிகவும் நல்லவர் அஜித் தான், ஏன் என்றால் என் பையனை பத்தாவது வரை அவர்தான் படிக்க வைத்தார் அந்த நன்றியை நாங்க என்றைக்கும் மறக்க மாட்டேன்.

அதேபோல் தல அஜித் தன் கையில் இருக்கும் காசை கணக்குப் பார்க்காமல் உதவி என தேடி வருபவர்களுக்கு கொடுத்துவிடுவார் அந்த நல்ல மனசு இருப்பதால் தான் இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் அவர் என பேட்டியில் பகிர்ந்துள்ளார்.