கொரோனா எதிரொலி தல அஜித் ஸ்டைலில் மக்களை எச்சரிக்கும் காவல்துறை.! இதோ தரமான வீடியோ.

ajith
ajith

தல அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவரின் விடா முயற்சியால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர், அதே போல் இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் யாராலும் கணக்கிட முடியாது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் குமார் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அது மட்டுமல்லாமல் இந்தியாவில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால் மக்கள் யாரும் வெளியில் நடமாடாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள்.

ஆனால் சில இளசுகள் மட்டும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வெளியே நடமாடுகிறது இவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள் போலீஸ்காரர்கள், இந்த நிலையில் அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் வில்லன் அருண் விஜய்யுடன் பேசும் வசனம் ஒன்றை மீம்ஸ் கிரியேட் செய்துள்ளார்கள் காவல்துறை பொது மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது,.

தல ரசிகர்கள் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஷேர் செய்து வருகிறார்கள்.