தனது அன்பு ரசிகர்களுக்காக தனது லட்சியத்தை தூக்கி எறிந்த தல அஜித்.! இதோ வைரலாகும் வீடியோ

ajith-news
ajith-news

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர், இவர் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தல அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தல அஜித் தானே தனது ரசிகர் மன்றத்தை கலைத்து உள்ளார், அதற்கான காரணம் ரசிகர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். என்ன தான் தனது ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் ரசிகர்கள் மனதில் அஜித் குடி போய்விட்டார்.

இந்நிலையில் தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக செய்த செயல் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர் இந்த நிலையில் தல அஜித் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய படத்தை நேரம் இருந்தால் மட்டுமே வந்து பாருங்கள் என கூறினார்.

ajith-1
ajith-1

அதுமட்டுமில்லாமல் எந்த நடிகரும் இதுவரை தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுரை கூறி நல்ல வழியில் செல்லுங்கள் என கூறி இருக்க முடியாது ஆனால் தல அஜித் தன்னுடைய  ரசிகர்களுக்காக அறிவுரை கூறி ரசிகர்களின் மனதில் பெரிய இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த நிலையில்  தல அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது அந்த பேட்டியில் கார் சேஸிங் விளையாட்டை விட்டு விட்டதாக தெரிவித்து இருக்கிறார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித்திற்கு கார் சேசிங் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் தன்னுடைய ரசிகர்களுக்காக தான் அந்த விளையாட்டை விட்டுள்ளார் என்பது அஜித் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கிறது.

ரசிகர்களுக்காக தனக்கு இஷ்டமான ஒன்றை மாற்றி  கொள்ளும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் இந்த செயல் தல அஜித் ரசிகர்களை உருக வைத்துள்ளது.