தல அஜித்தின் அட்டகாசம் திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? அதுவும் எந்த முன்னணி ஹீரோவா?

ajith-attagasam-tamil360newz
ajith-attagasam-tamil360newz

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவில் பல நடிகர்கள் பல திரைப்படங்களில் நடிக்க மறுத்து அதன் பிறகு வேறு ஒரு நடிகர் நடித்து மிகப் பெரிய ஹிட்டான கதை பல நடந்துள்ளன, அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் அட்டகாசம்.

இந்த அட்டகாசம் திரைப்படத்தை இயக்குனர் சரண் தான் இயக்கி இருந்தார் இந்த திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார், மேலும் இந்த திரைப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் சுஜாதா, ரமேஷ்கண்ணா, கருணாஸ், வையாபுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அஜித்தின் அசுர வளர்ச்சிக்கு அட்டகாசம் திரைப்படமும் ஒரு காரணம் என்று கூறலாம், இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது, அதேபோல் அஜித்தின் சினிமா திரை பயணத்தில் இந்த திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் அட்டகாசம் திரைப்படத்தில் முதன் முதலில் யார் நடிக்க இருந்தது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது அட்டகாசம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் தளபதி விஜய் தான் சில காரணங்களால் விஜய் இந்த திரைப்படத்தை தவிர்த்துள்ளார் அதன்பிறகு அஜித்துக்கு இந்த கதை சென்றது இதை இயக்குனர் சரன் ஒரு பேட்டியில் கூறினார்.