மேக்கப்மேனனுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்ட தல அஜித்.! என் தெரியுமா.?

ajith
ajith

தமிழ் சினிமாவில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவரை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மேலும் அதிகமாக பிடிக்க காரணம் ஏழை, பணக்காரர் என வித்தியாசம் பார்க்காமல் அனைவருமிடமும் தனது நேர்மையான அன்பு செலுத்துவதால் இவர் அனைவருக்கும் பிடித்த நபராக தோன்றுகிறார்.அவர் படப்பிடிப்பிற்கு செல்லும்பொழுது  அடிமட்ட வேலைகளிலிருந்து முன்னணி பிரபலங்கள் வரையிலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்கிறார் என்று நாம் அனைவரும் கேட்டுள்ளோம் அதையே ஆரம்பத்தில் இருந்து இன்று வரையிலும் தொடர்ந்து பின்பற்றுவதால் எனவே இவரை மக்களுக்கு இந்த போன நகம் நபராக அஜித் இருந்து வருகிறார்.

அஜித் மற்றவருக்காக தன்னை மாற்றிக் கொள்ளாதவர் தனக்கு என்ன வருமோ ,தனது வழி என்னவோ அதை நோக்கியே பயணத்தை மேற்கொண்டு வெற்றியைக் காணும் நபராக இருப்பதால் இளம் ரசிகர்களுக்கு தற்பொழுது ஹீரோவாக இருந்து வருகிறார்.தற்பொழுது தல அஜித்தை பற்றிய செய்தி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் அவர்களுக்கு பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த விழா பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்பாக அஜித் அவர்கள் தனது மனைவி ஷாலினிக்கு மேக்கப் அலங்காரம் செய்ய மேக்கப்மேன் ஒருவருக்கு போன் செய்து அழைத்து உள்ளார்.

அந்த நபர் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்து ஷாலினிக்கும் அவரது தங்கை ஷாமிலி அவர்களுக்கும் மேக்கப் செய்து விட்டு கிளம்பிவிட்டார். இந்நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வந்ததால் அஜித் அவர்கள் அவர்களை உபசரிப்பதில் தனது கவனத்தை செலவிட வேண்டியது ஆகி விட்டதால் மேக்கப்மேனை கவனிக்க முடியாமல் போனது.

நிகழ்ச்சி முடிந்த பின் அவர் எங்கே என்று தனது மனைவி ஷாலினியுடன் கேட்டுள்ளார் அதற்கு அவர் முன்பே போய் விட்டார் என கூறியுள்ளார் இதனையடுத்து அஜித் அவர்கள் உடனே போன் செய்து மன்னித்து விடுங்கள் விருந்தினர்கள் அதிகம் வந்ததால் தங்களை கவனிக்க முடியவில்லை நீங்கள் பணம் வாங்காமல் போய் விட்டீர்கள் மேலும் நீங்கள் சாப்பிட்டீர்களா என கேட்டறிந்தார். அவரும் நான் சாப்பிட்டு தான் வந்தேன் என தெரிவித்தார்.

ajith
ajith

அஜித் அவர்கள் நான் மறுநாள் வெளியூருக்கு செல்ல வேண்டியுள்ளது நீங்கள் இப்பொழுது வந்தால் என் கையால் உங்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டுகிறேன் என 12 மணிக்கு கூறியுள்ளார் அஜித் ஏனென்றால் நான் உங்களை அழைத்து உள்ளேன் நான் என் கையால் பணம் தருவது தான் சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார். அந்த மேக்கப்மேன் நீங்க இருக்கும்போதே நான் வரேன் என்று கூறினார்.

இதை அறிந்த தல ரசிகர்கள் தல தல தான் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது தான் எங்க தல என்று பெருமையாக கூறிவருகின்றனர்.