thala Ajith and vijay dont act in a same movie: தல அஜித் எனவும் அல்டிமேட் ஸ்டார் எனவும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். அஜித், இவர் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தல அஜித் அமராவதி திரைப்படத்திலிருந்து இறுதியாக வெளியாகிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களையும், தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.
முப்பதை தாண்டி தல அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்படம் எடுப்பது, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் தனது திறமையை நிரூபித்து வருகிறார், பைக் ரேஸ் ஓட்டும் பொழுது இவருக்கு ஏற்பட்ட விபத்தால் முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். யார் கண் பட்டதோ தெரியவில்லை அடிக்கடி இவருக்கு படப்பிடிப்பின்போது ஆக்சிடென்ட் ஆகிவிடுகிறது, இருந்தாலும் சூட்டிங் தடைபெறக் கூடாது என்பதற்காக தள்ளிப்போடாமல் தொடர்ந்து அந்த வலி உடனே நடித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு கூட வலிமை திரைபடத்தின் படப்பிடிப்பின் போது பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகவும் அதனால் சில காயங்களுடன் அஜித் தப்பித்து விட்டார் எனவும் தகவல் வெளியானது. ஆனால் அடிபட்டவுடன் அஜித் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார், தற்பொழுது ஊரடங்கு காரணமாக சூட்டிங் நடக்காமல் இருந்து வருகிறது. அதனால் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது, இப்படியே போனால் படம் பொங்கலுக்கு தான் ரிலீஸாகும் என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் பிறந்தநாள் முன்னிட்டு 9 மில்லியன் ட்வீட் போட்டு ரசிகர்கள் ரெக்கார்டு வைத்தார்கள், இந்த நிலையில் லாக் டவுன் என்பதால் பலருக்கும் போரடிக்கும் என்று அஜித்தின் பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் ஏன் பாலிவுட் படத்தை போல் நீங்களும் விஜயும் ஒன்றாக சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கொஞ்சம்கூட மழுப்பாமல் மிகவும் தில்லாக பதிலளித்துள்ளார்.
அஜித் அவர்கள் கூறியதாவது இட்ஸ் டூ ரிஸ்கி ஒரு படத்தில் ஒரு சில பாடல்கள் மட்டுமே ஹிட்டடிக்கும். அதேபோல் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதால் இரண்டு ஹீரோக்களில் யாராவது ஒருவருக்கு தான் பாடல் ஹிட் அடிக்கும், அதனால் மற்றொரு ஹீரோவுக்கு பாடல் அமையாமல் கூட போகலாம், அதனால் எங்களை சுற்றி தேவையில்லாத பாலிடிக்ஸ் உருவாகும். அந்த பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை என்று நெற்றியில் அடித்தது போல் அஜீத் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இரண்டு பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடித்தால் வேலை வாய்ப்பு குறைந்து விடும் தனித்தனியாக நடிக்கும் பொழுது இரண்டு திரைப்படங்களிலும் பல தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உண்மையான அர்த்தத்தையும் கூறியுள்ளார்.