தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார், வலிமை திரைப்படத்திற்காக ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்து உடலை கட்டுகோப்பாக மாற்றியுள்ளார் அஜித்.
மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார், அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தார்கள் ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக படம் பொங்கலுக்கு தள்ளிப்போகும் என கூறுகிறார்கள் கோலிவுட் வல்லுனர்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு தலா 61 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கு இடையே அதிகரித்துள்ளது, இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் தல அஜித்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட படத்தை இயக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி, தல அஜித் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் அவர் சமூக அக்கறை கொண்ட படமான நேர்கொண்டபார்வை திரைப்படத்தை பார்த்த பிறகு அஜித்தை மிகவும் பிடித்து விட்டது அதனால் தல அஜித்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சமூக அக்கறை கொண்ட திரைப்படமாக தான் இருக்கும் அதற்காக என்னிடம் சமூக அக்கறை கொண்ட கதை இருக்கிறது.
அந்தக் கதையை வைத்து கண்டிப்பாக நான் படம் எடுப்பேன் அந்த கதையில் மட்டும் அஜித் நடித்தால் கண்டிப்பாக நிறைய விருதுகளை பெறுவார் அதிக வாய்ப்பு இருக்கிறது என சமுத்திரகனி தெரிவித்தார், அதைப்போல் சமுத்திரகனி அஜித்தை பார்த்து அந்த கதையை கூறினால் அஜித் ஓகே சொல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.