அதிக திரையரங்குகளை கைப்பற்றிய துணிவு..! விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி.

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் கமல் அவர்களைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பதால்..

இவர்களது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் உயர்த்தி தான் வாங்கி நடிக்கிறார்கள். இப்பொழுது நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி உள்ளதாம்.

படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்கிறது. அதேபோல விஜயின் வாரிசு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் நேருக்கு நேராக படங்களின் மூலம் மோதுவதால்..

ரசிகர்கள் இந்த பொங்கலை திருவிழா போல கொண்டாட ரெடியாக இருக்கின்றனர் ஆனால் அதற்கு முன்பாக யாருக்கு அதிக திரையரங்குகள் என்பதே கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இரண்டு பேருக்குமே சரிக்கு சமமான மார்க்கெட் இருப்பது தான் இதற்கு பிரச்சினை ஆனால் தமிழகத்தில் துணிவு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் ரிலீஸ் செய்வதால் அதிகப்படியான திரையரங்குகள்  துணிவு தான்.

கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அதாவது 800 திரையரங்குகள் துணிவு திரைப்படம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரவில்லை. இருப்பின்னும் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.