தமிழ் சினிமாவில் பல வருடத்திற்கு பிறகு அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரின் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் இரு தரப்பு ரசிகர்களும் இதனை வைரலாக்கி வருவது மட்டுமில்லாமல் சமூக வலைதள பக்கத்தில் இது பற்றிய பதிவுகளை நாளுக்கு நாள் வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள்.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் அளவு கலக்கம் என்பதை காணுவதற்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது.
இவ்வாறு நடந்த சம்பவம் ஆனது எந்த ஒரு திரைப்படத்திற்கும் இதுவரை நடந்ததில்லை அந்த வகையில் இந்த வியாபாரம் மிகப்பெரிய சாதனையாக அமைந்தது மட்டுமில்லாமல் வாரிசு திரைப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இந்த நிலவரம் சரியாக காட்டி உள்ளது. மேலும் ஓவர் சீஸ் மார்க்கெட்டை பொருத்தவரை அஜித்தை விட விஜய்க்கு அனைத்து பக்கமும் மவுசு அதிகமாக உள்ளது.
அந்த வகையில் வெளிநாட்டு நிலவரத்தை பார்க்கும் பொழுது விஜய்க்கு தான் அதிக அளவு மவுஸ் உள்ளது அந்த வகையில் துணிவு திரைப்படத்தை வாங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த திரைப்படத்தை அதிகளவு தியேட்டர்களில் வெளியிட உள்ளார் ஆகையால் வாரிசு திரைப்படத்திற்கு கிடைக்கக்கூடிய தியேட்டர்கள் கண்டிப்பாக எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் வாரிசு திரைப்படத்தை காட்டிலும் துணிவு திரைப்படத்தின் ஓவர் சீஸ் பிசினஸ் மந்தமாக இருப்பதாக தெரியவந்த நிலையில் இவை மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது இதன் காரணமாக இந்த திரைப்படத்தை அதிக அளவு விலை கொடுத்து வாங்க பெரிய நிறுவனங்கள் பல நிறுவனங்கள் யோசித்து வருகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் அவர் நடிப்பில் வெளியான விவேகம் வலிமை ஆகிய திரைப்படங்கள் சரியான வெற்றியை கொடுக்காதது தான் இதற்கு காரணம்.
மேலும் வெளிநாடுகளில் வாரிசு திரைப்படம் கொடி கட்டி பறக்கும் நிலையில் துணிவு திரைப்படம் பெருமளவு வியாபாரம் இல்லாததால் படபடிபினர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளார்கள் எது எப்படியோ பாக்ஸ் ஆபீஸ் என்று ஒன்று இருக்கிறது கண்டிப்பாக தலைக்கு இடம் கிடைக்கும் என தல ரசிகர்கள் மிகுந்தஎதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.