அயோக்கியர்களின் ஆட்டம் தான்.. துணிவு படத்தின் கதை – ஹச். வினோத் கொடுத்த அப்டேட்.!

thunivu
thunivu

நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஹச். வினோத் தனக்கே உரிய ஸ்டைலில் எடுத்துள்ளார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

துணிவு திரைப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சிபி ஆமீர் போன்றவர்களும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

இருப்பினும் துணிவு திரைப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஹச் வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஹெச் வினோத் பேசியது துணிவு படம் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது அயோக்கியர்களின் ஆட்டம்..

இந்த படத்தில் அஜித் வில்லனாக நடித்துள்ளார் என்று நான் கூறினால் கண்டிப்பாக அனைவரும் இது மங்காத்தா 2 என்று நினைப்பீர்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இந்த திரைப்படத்தில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இவர் இவ்வாறு கூறியிருப்பது தற்பொழுது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளதோடு  மட்டுமல்லாமல் நிச்சயம் துணிவு படம் பொங்கல் ரேசில் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் எனவும் கூறி வருகின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.