தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தற்பொழுது அஜித்தின் துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் சென்சார் அதிகாரிகளால் நீக்கப்பட்ட காட்சிகள், மியூட் செய்யப்பட்ட வசனங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தனர்.
எனவே இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, திரைப்படங்களை முறைப்படுத்துவதற்கு திரைப்பட சான்றிதழ் வாரியம் செயல்பட்டு வருகிறது. திரைப்படங்கள் வெளியாகுவதற்கு முன் இந்த வாரியத்தின் உறுப்பினர்கள் இந்த படங்களை பார்வையிட்டு விதிகளின்படி காட்சிகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து விதிமீறல்கள் உள்ள காட்சிகளை வசனங்களை நீக்க சொல்லிய பின்னர் மீண்டும் பார்வையிட்டு திரைப்படத்தினை வெளியிடுவதற்கான சான்றிதழை அளிப்பார்கள்.
திரைப்பட சான்றிதழ் வாரியத்தை பொறுத்தவரை ஆபாசமான, அதிக வன்முறை மிக்க காட்சிகளையும், தரக்குறைவான வசனங்களை மட்டுமே நீக்க சொல்வது வழக்கம் சமீப காலங்களில் இணைய வழி சினிமா திரை ஓடிடி மூலம் படங்கள் விரைவில் வெளியாகின்றனர். அப்படி இணைய வழி திரை வெளிவரும் வேலையில் நீக்கப்பட்ட காட்சிகளை வசனங்களை அதில் நினைத்து வெளியிடுகின்றனர்.
அதாவது எது தவறு, ஆபாசம், விதிமீறல் என்று குறிப்பிட்டு நீக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்டனவோ அவைகளை இணைத்து திரை இடுகின்றனர் அது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயலாகும் சமீபத்தில் பொங்கலை ஒட்டி வெளியான ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தில் இடம்பெறாத சில காட்சிகளும், வசனங்களும் ஓடிடி திரையில் வெளியிடப்பட்டுள்ளது என அதிர்ச்சளித்துள்ளார்.
இவ்வாறு பல நடிகர்களுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இவ்வாறு முன்னணி நடிகர்களே அவதூறான சில வார்த்தைகளை பேசுவது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தான் உள்ளது. பலரும் அந்த நடிகர்களை ரோல் மாடலாக வைத்திருக்கும் நிலையில் இப்படி அவர்கள் பேசுவது அந்த ரசிகர்களையும் பேசத் தூண்டும்.