இணையதளத்தில் வைரலாகும் “டெஸ்ட்” படத்தின் மோஷன் போஸ்டர்.! நயன்தாராவுடன் இணைந்த முன்னணி நடிகர்கள்

nayanthara-
nayanthara-

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர் அதன் பிறகு அவருடைய மார்க்கெட் சரியும் எனத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் நயன்தாராவுக்கு அதற்கு எதிர்மாராக நடக்கிறது ஆம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு..

நயன்தாராவின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த கனெக்ட், கோல்ட் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” படத்தில் நடிக்கிறார்.

அடுத்து நயன்தாரா 75 மற்றும் டெஸ்ட் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது டெஸ்ட் படம் குறித்து உறுதியான தகவலும் வெளிவந்துள்ளது. டெஸ்ட் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து மாதவன், சித்தார்த் போன்றவர்கள் நடிக்க உள்ளனர். சசிகாந்த் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

ஒயிட் நாட் ஸ்டுடியோ இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறது படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படமாக இருக்கும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இதை உறுதிப்படுத்தும் வகையில் டேஸ்ட் படக்குழு முதலில் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது அதில் நயன்தாரா, சித்தார்த் மற்றும் மாதவன் போன்றவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியில் கிரிக்கெட் மைதானத்தை காட்டுகிறது எனவே இந்த படம் கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை முதல் முறையாக நயன்தாரா கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படத்தில் நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இதோ டெஸ்ட் படத்தின் போஸ்டரை நீங்களே பாருங்கள்.