தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் சினிமாவையும் தாண்டி துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் என பலவற்றிலும் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலை மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ஏகே 61 திரைப்படத்தின் படப்பிடிப்பில் தற்பொழுது அஜித் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் அஜித்தினை தொடர்ந்து சஞ்சய், மஞ்சு வாரியார் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் அஜித்தின் 62 வது திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. எனவே விக்னேஷ் சிவன் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்கள் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஏகே 61 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். இந்த படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது இவ்வாறு தற்பொழுது இந்த படத்தின் 80 சதவீத கடைப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் 20 சதவீத படம் பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனை அடுத்த கட்ட படப்பிடிப்பில் முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் தற்பொழுது அந்த படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாகவும் தற்பொழுது இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே உருவாக இருப்பதாகவும் இவ்வாறு தாமதம் அவதால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக திட்டமிட்டு உள்ளார்களாம்.
இவ்வாறு ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிந்தவுடன் அஜித் தன்னுடைய 62வது திரைப்படத்தில் இணையவுள்ளராம் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது இவ்வாறு ஏகே 61 தாமதமாவதால் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.