சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு” திரைப்படம் – தெலுங்கில் ரீமேக்.? ஹீரோவாக யார் நடிக்கப் போவது தெரியுமா.?

maanaadu
maanaadu

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான திரைப்படமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருக்கின்றன.

அந்த காரணத்தினால் மக்கள் கூட்டம் இந்த படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர். மேலும் மாநாடு திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு வசூல் வேட்டையை தற்பொழுது கண்டு வருகிறது இதுவரை 70 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இன்னும் சில நாட்களில் 100 கோடியை தொட்டு பிளாக்பஸ்டர் படமாக மாற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க டைம் லூப்பையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இருந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் அதேசமயம் புது அனுபவத்தை கொடுத்துள்ளது மேலும் இந்த படத்தில் நடித்தவர்களும் படத்தின் கதையை முதலில் நன்கு உணர்ந்து பின் நடித்து உள்ளனர்.

சிம்பு உடன் கைகோர்க்கும் எஸ். ஜே. சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் சிறப்பாக நடித்து அசத்தி உள்ளனர் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படம் முதலில் முக்கிய மொழியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

தெலுங்கில் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே ரீமேக் செய்யப்படுகிறது இந்த படத்தில் ரவிதேஜா நடிக்க ஆசையாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன அதுமட்டுமின்றி மாநாடு படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியது ரவி தேஜாவை தானாம்.