ரஜினி, அஜித், விஜய் படங்களுக்கு முடக்கம் போட்ட தெலுங்கு திரைவுலகம்.!

ajith-vijai-rajini
ajith-vijai-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடிகர் விஜய்,அஜித் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களுக்கு தெலுங்கு திரைவுலகம் திடீரென செக் வைத்திருப்பதாக கூறிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களாக வளர்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அஜித் மற்றும் விஜய் ஆகியோர்களின் திரைப்படங்களின் பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்தில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு இவர்களுடைய படங்கள் படமாக்கப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படிப்பட்ட நிலையில் திடீரென தெலுங்கு திரை உலகம் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதால் ரஜினி அஜித் விஜய் படங்களில் படப்பிடிப்பு தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் கொரோனா காலத்திற்குப் பிறகு தெலுங்கு திரை உலகின் தயாரிப்பாளர்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் திரைப்படம் தயாரிப்பாளர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்க வேண்டும் ஒன்பது மிகவும் முக்கியமானது எனவே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் மீண்டும் தெலுங்கு திரை உலகின் சங்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.

சார் இதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தெலுங்கு வேலைநிறுத்தம் உறுதி செய்யப்பட்டதால் ரஜினியின் ஜெயிலர், விஜயின் வாரிசு, அஜித்தின் ஏகே 61 நாங்கள் படப்பிடிப்பு தள்ளி போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறித்து தெலுங்கு சினிமா வெளியிட்ட அறிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகர்களான திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வரும் நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமோ எனவும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரைவில் தமிழ் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.