Vijay : திரையுலகில் நடிக்கும் நடிகர்கள் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க சைலண்டாக போட்டி போட்டுக் கொள்வார்கள் அது பெரிய அளவில் மீடியாக்களில் தெரியாது ஆனால் சமீபகாலமாக அது வெளிப்படையாக தெரிகிறது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என பலரும் கூறி வருகின்றனர்.
பலரும் மறுப்பு தெரிவித்த நிலையில் ரஜினி ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் ஒரு குட்டி கதையை சொல்லி தனக்கு இணை யாரும் கிடையாது என்பது போல சொல்லி இருந்தார். அதன் பிறகு ரஜினி, விஜய் பற்றி பலரும் பேசி வருகின்றனர் இந்த நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பத்திரிக்கையில் ஆரம்பத்தில் எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் இப்படிதான் முதலில் எழுதி வந்தார்கள்.. அஜித் – விஜய் என எழுதினால் உடனே விஜயிடம் இருந்து அந்த பத்திரிக்கைக்கு போன் பறக்கும் அப்படி சொல்ல வேண்டாம் இனிமேல் விஜய் – அஜித் என எழுதுங்கள் என கோரிக்கை வைப்பார்.
வலைப்பேச்சியில் கூட ஒரு முறை அப்படித்தான் நாங்கள் சொல்லிவிட்டோம் உடனே விஜய் தரப்பில் இருந்து எங்களுக்கு அப்படி சொல்ல வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்தார்கள் எனவே துவக்கம் முதலே எம்ஜிஆர் சிவாஜி போல.. ரஜினி கமல் போல.. தனக்கு பின்னர் தான் அஜித் வரவேண்டும் என்பதில் விஜய் தெளிவாக இருந்தார்.
ரஜினியாக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை சூப்பர்ஸ்டார் பட்டம் தான் இவர்களுக்கு வேண்டும் உலக நாயகன் பட்டத்தை கொடுத்தால் வேண்டாம் என சொல்லிவிடுவார்கள். விஜய் அதில் எப்பொழுதும் தெளிவாக இருக்கிறார் என பேசினார். இந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் தற்போது காட்டுதீ போல பரவி வருகிறது.