இந்திய அணி இங்கிலாந்து உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்று காட்டியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் சொல்லிக்கொள்ளும்படி மிகப்பெரிய ரன் வேட்டையை நடத்த வில்லை என்றாலும் இரண்டாவது இன்னிங்சை மிக நேர்த்தியாக கையாண்டு மிகப்பெரிய ஒரு கோரை நிர்ணயித்தது.
இது முக்கிய காரணம் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா , ஷர்துல் தாகூர், புஜாரா விராட் கோலி, பண்ட, ராகுல் போன்றவர்கள் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்தினார்.
அதைத்தொடர்ந்து குறிப்பிடப்பட்ட அந்த இலக்கை இங்கிலாந்து அணி துரத்தியது ஓபனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக கொடுத்தாலும் அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளரான பும்ரா, தாகூர் மற்றும் ஜடேஜா ஆகியவர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அசத்தினார்.
இந்த காரணகளால் மட்டுமே வெற்றியை ருசித்தது இந்தியா. 4 வது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக ரோகித்சர்மா தேர்வு செய்யப்பட்டார் அதன் பிறகு பேட்டி கொடுத்த ரோகித் சர்மா : அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீசி மட்டுமின்றி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டதால் தான் உங்கள் வெற்றியை ருசித்தோம்.
மேலும் அடுத்த அடுத்த போட்டியில் நாங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாண்டு வெற்றியை ருசிக்க முடியும். இந்த டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாகூர் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்ததோடு சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
என்னை பொறுத்தவரை மேட்ச் வின்னர் இன்னிங்ஸ் விளையாடியது அவர்தான் ஆட்டநாயகன்னுக்கு மிகவும் தகுதியானவர். கொடுக்கின்ற வாய்ப்பை ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து காட்ட மிகத் துடிப்பாக இருக்கிறார் ஷர்துல் தாகூர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டும் கலக்குவதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.