Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பின் பயங்கரமாக அடிப்பார் என பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ் கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாதிரி செல்வராஜ் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். பொதுவாக இவருடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அரசியலினை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
அப்படி கடந்த ஜூன் மாதம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தினை இயக்கியனார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி நடைபெற்றது அப்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஒவ்வொரு படத்தின் பொழுதும் பலவிதமான சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகரான டெலிபோன் ராஜ் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றியத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சாதி வெறி தூண்டும் வகையில் படம் எடுப்பது மிகவும் கேவலமான செயல் இந்த காலத்தில் இளைஞர்களுக்கு சாதி என்றால் என்ன என்று தெரியவில்லை. மாமன்னன் படம் பார்த்த பிறகு தான் சாதி என்றால் என்ன என்ற பல இளைஞர்கள் கேட்கிறார்கள்.
அனைவரும் மறந்து போன விஷயத்தை மீண்டும் தூண்டி விடுவது சரியா? மாரி செல்வராஜ், பா ரஞ்சித் போன்ற அவர் பொதுவாக சாதியை வளர்த்து விடுவதற்காக படம் எடுக்கிறார்கள். எங்களை அடிக்கிறார்கள், கோபப்படுகிறார்கள் இன்றைய இளைஞர்களிடம் சாதி வெறியை தூண்டிவிடுகின்றனர். இவர்களின் படம் வெளியானால் ரசிகர்களாக இல்லை சாதி வெறியர்களாக தான் பலர் படம் பார்க்கின்றனர்.
மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ இதை உதயநிதியை பேட்டி ஒன்றில் அவர் சைக்கோ சார் அடிப்பார்.. என்று சொல்லி இருப்பார் படப்பிடிப்பில் பல நடிகர்களை அடிக்கிறார் இப்படி எல்லாம் ஒருவரை அடிக்கலாமா? கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் ஒரு காட்சியில் உண்மையில் ஒரு நடிகையை அப்படி அடித்து இருக்கிறார்கள்.
அப்பொழுதுதான் அது ரியலாக இருக்கும் என்று அடிக்க சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் பேசிய ஆடியோ இன்னும் என் ஃபோனில் இருக்கிறது என்னுடைய சொந்த ஊரில் தான் இந்த படப்பிடிப்பு நடத்துவேன் என்பது அடி வாங்குவதற்கு மட்டும் நடிகர்கள் அதற்குப் பின்னாடி வசனம் பேசுவதற்கு மட்டும் உங்க சாதி ஆட்களை நிற்க வைப்பது எந்த வகையில் நியாயம். ஜாதியா சந்தோஷமா படங்களை செய்துக் கொண்டு போங்க அதை விட்டுட்டு எதற்கு இப்படி எல்லாம் ஒருவரை அடித்து கொடுமை படுத்துறீங்க?
சாதி வெறியை தூண்டும் வகையில் படங்களை எடுக்கக் கூடாது என்ற சட்டம் போட வேண்டும், இயக்குனர் சங்கம் இது போன்ற படம் எடுப்பதை அனுமதிக்க கூடாது. இப்படி செய்தால்தான் தமிழ் சினிமா வளர்ச்சி அடையவில்லை என்றால் அது ஒரு சாபக்கேடாகவே அமைந்துவிடும் என்று டெலிபோன் ராஜ் பேட்டியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.