Prabhu Deva: வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா பான் இந்திய படமாக உருவாக்கி வரும் வுல்ஃப் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் டீசரை பட குழு வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் வினு வெங்கடேஷ்.
இவர் சுற்றுலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து வுல்ஃப் என்ற படத்தினை இயக்கி வருகிறார் இதுதான் இவருடைய இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. வுல்ஃப் படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இவருடன் இணைந்து ராய் லட்சுமி, அனசுயா பரத்வாஜ், ரமேஷ் திலக், அஞ்சு சூரியன் போன்ற நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க வரலாற்றுக் காலத்தில் இருந்து தற்போது வரையிலும் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிவியலை சம்பந்தப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி கதையின்படி ஹீரோ, வில்லன் இரண்டுமே ஓநாயிக்கானா அதிசயத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
அதில் யார் வெற்றி பெறுவார் என்பதே படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் டீசரை பட குழு வெளியிட டீசர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.