உண்மை சம்பவம் மற்றும் நாவலை மையமாக வைத்து பல கதைகளை இயக்கி வெற்றி கண்டுள்ளவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் கடைசியாக செக்கச் சிவந்த வானம் என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதன் பின் இரண்டு வருடங்கள் கழித்து மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, ஜெயராமன், திரிஷா, பார்த்திபன், ரியாஸ் கான், பாபு ஆண்டனி மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி உள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் சுமார் 500 கோடி பொருள் செலவில் படத்தை எடுத்துள்ளது.
இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வேற லெவெலில் உருவாகி உள்ளதாம். அதற்கு முன்பாகக இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் போன்றவை தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருந்தன. இதை பார்த்து ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் நிச்சயம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் RRR, KGF 2 படங்களின் வசூல் சாதனையை முறையடிக்கும் பலரும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற இன்று மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் டீசர் வெளியாகும் என திட்டவட்டமாக சொல்லி இருந்தது.
சொன்னது போலவே தற்பொழுது டீசர் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று போய்க்கொண்டு இருக்கிறது. இதோ நீங்களே பாருங்கள் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை..