சன் டிவி சீரியலுக்கு தாவிய விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகை.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அண்ணன் தம்பி பாசம் உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அதோடு இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது நிலையில் இந்த சீரியலில் நடித்த பல கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள்.

இந்த சீரியலில் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்த ஹீரோ விலகிய நிலையில் தங்கை கேரக்டரில் நடித்து வந்த வரும் ஹீரோயினும் விலகினார் தற்போது இவர்களை தொடர்ந்து பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரீத்தி குமாரும் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த பிரதீப்குமார் தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். திடீரென்று இவர் அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் அது குறித்து இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டதாவது ” எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக கனத்த மனதுடன், வானத்தைப்போல தொடரில் இருந்து விலகுகிறேன். “கண்ணியமாக மௌனம் காக்க முடிவு செய்துள்ளேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர் நடித்து வந்த பொன்னி கேரக்டரில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வரும் சந்தினி பிரகாஷ் நடிக்க இருக்கிறார். விரைவில் இவர் நடிக்க இருக்கும் எபிசோடுகள் ஒலிபரப்பாகும்.

Leave a Comment