நான் செல்லும் பாதைகள் எல்லாம் கண்ணிவெடி வைத்த இயக்குனர் ஷங்கருக்கு டாடா.? இனி எனது ஆட்டம் வேற லெவல் மாஸாக பேசிய வடிவேலு.?

vadivelu-and-shankar
vadivelu-and-shankar

தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், சோலோ ஹீரோவாகவும் வெற்றிகளை குவித்து வந்தவர் வைகை புயல் வடிவேலு. இப்படி தொடர்ந்து பல வருடங்களாக மக்களை மகிழ்வித்து வந்த இவர் இயக்குனர் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக பல  ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக முடியாத நிலை ஏற்பட்டது தற்போது அந்த ரெக்கார்டு நீக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் வடிவேலு தற்போது பட வாய்ப்புகளை குவிந்து கொண்டுவருகிறார்.

ஹீரோவாக இவர் நடித்த இருபத்தி மூன்றாம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 24ம் புலிகேசி என்ற டைட்டிலில் புதிய படத்தை துவங்க இருந்தனர் இந்த திரைப்படத்தை சங்கர் தான் தயாரித்து வந்தார் ஆனால் இடையில் சில பிரச்சனைகள் காரணமாக சங்கருக்கும், வடிவேலுக்கு நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் இந்த படமும் எடுக்க முடியாமல் போனதோடு வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் அடுத்தடுத்த மரண அடி கைகொடுத்தது அதாவது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு தமிழ் படங்களில் நடிக்க கூடாது என மிகப்பெரிய ஒரு அதிரடி உத்தரவை போல அதன் பிறகு வடிவேலு வாய்ப்புகள் கிடைக்காமல் போன நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் சங்க ஒன்று கூடி ஒரு சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை ஒரு வழியாக முடிந்தது.

அந்த காரணத்தினால் வடிவேலு தமிழ் சினிமா நடிக்கலாம் என கூறியுள்ளது. காமெடி மற்றும் ஹீரோவாகவும் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க உள்ளார். முதலில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐந்து படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது முதலில் அவர் பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்திற்கான பிரஸ்மீட் சமீபத்தில் நடைபெற்றது அப்போது மாஸ்ஸாக வந்ததோடு மட்டுமல்லாமல் செம்மையாக பேசி அசத்தினார்.

அவர் கூறியது : எனக்கு எண்டே கிடையாது நான் கால் வைத்த இடத்திலெல்லாம் கண்ணிவெடி வச்சாங்க அதில் எல்லாத்திலேயும் நான் தப்பித்து விட்டேன் என் மீது இருந்த அனைத்து பொய் வழக்குகளும் ஒருவழியாக நீக்கப்பட்டு விட்டது இனிமேல் எனது ஆட்டம் ஆரம்பம். ஷங்கர் இயக்கத்தில் நான் இனி படம் நடிக்கவே மாட்டேன் அது போல் வரலாற்று படம் உள்ள கதைகளிலும் இனி நான் நடிக்க மாட்டேன் என கூறி அந்த பேட்டியை முடித்தார்.