பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்ற இருக்கும் இயக்குனர் ஷங்கர் தமிழில் ரஜினி, விஜய், பிரசாந்த், அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களை வைத்து படங்களை கொடுத்த இவர் மீண்டும் சிறப்பான நடிகர்களை வைத்து தமிழில் படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது ரூட்டை மாற்றி இந்தி மற்றும் தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்தார்.
தெலுங்கில் முதலாவதாக நடிகர் ராம் சரணுக்கு கதையை சொல்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஷங்கருக்கு முதலில் பட வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்தவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சு மோகன். 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படம் ஜென்டில்மேன்.
இந்த படத்தை மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துக் கொடுத்தவர் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன். இந்த படத்தில் செந்தில், வடிவேலு, அர்ஜுன், மதுபாலா, மனோகரம்மா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான். முதல் படத்திலேயே வெற்றி படமாக இயக்குனர் ஷங்கர் மாற்றியதால் அவருக்கும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவித்து ஓடினார்.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன். ஜென்டில்மேன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார். ஜென்டில்மேன் முதல் பாகத்தில் பணியாற்றிய நடிகர்களான அர்ஜுன் மற்றும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஆகியவர்களை மீண்டும் அனுப்பி உள்ளார் ஆனால் இருவரும் மற்ற படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் பணியாற்ற முடியாது என கூறிவிட்டனர்.
இதனால் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து ஜென்டில் மேன் 2 திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன். இந்த நிலையில் ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது மிகப்பெரிய கேள்வி குறியாக இருந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ஒரு புதிய கூட்டணியை ஜென்டில்மேன் இரண்டாவது பாகத்தில் உருவாக்க உள்ளார்.
ஜென்டில்மேன் 2 படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்பதை நீங்கள் சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் முதல் மூன்று பேருக்கு தங்க நாணயம் தருவதாக கூறினார் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தனது தோன்றிய அமைப்பாளரை சொல்லினர். அதிலும் குறிப்பாக அதிகம்.
இடம் பெற்ற பெயர்கள் ஏ ஆர் ரகுமான், இளையராஜா யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர் ரகுமானின் மகன் பெயர் அடுத்தடுத்து பெயர்கள் போய்க் கொண்டே இருந்தன ஆனால் உண்மையில் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்க போவது பாகுபலி படத்திற்கு இசை அமைத்த கீராவாணி தான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் சரியாக சொன்னா 3 பேருக்கு தங்க நாணயம் வெகு விரைவிலேயே தரப் போவதாக தயாரிப்பாளர் சொல்லியுள்ளார்.