தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தி மற்றும் அர்ஜுன் இருவரும் தமிழ் பதவிக்காக தங்கச்சி புருஷனையே கொலை செய்யப் பார்த்தான் என போஸ்டர் அடித்து ஒட்டி தமிழ் மீது கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள். அதனால் தமிழுக்கு ஓட்டு போட பலரும் முன் வரவில்லை அது மட்டும் இல்லாம அந்த சமயத்தில் நமச்சி போட்டோ எடுத்துக் கொண்டு வந்து தமிழிடம் இனிமே நமக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது.
நமக்கு ஓட்டு போடுறனு சொன்னவங்களும் இப்ப கோதைக்கு தான் ஓட்டு போடணும்னு சொல்றாங்க எனக் கூற என்ன நடந்துச்சு என கேட்க உடனே நமச்சி போட்டோவை காட்டுகிறார். இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை என சரஸ்வதி கூற தமிழும் இப்படி செய்வாங்கன்னு எனக்கு தெரியும் ஆனா இதுக்கு மேல நம்ம என்ன பண்ண முடியும் நடக்கிறது நடக்கட்டும் என கூறுகிறார் உடனே சரஸ்வதி கிளம்பும் நேரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வரலாமா என கேட்க மூவரும் கோவிலுக்கு போகிறார்கள் தமிழ் அங்கு சாமியிடம் நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்ததில்லை எனக்கு துரோகம் செய்த வங்களுக்கு கூட நல்லது தான் செய்தேன் இந்த பழியோட நான் இருக்கிறேன் என வேண்டிக் கொள்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த எலக்ஷனில் என்னை ஜெயிக்க வச்சு எனக்கு வாழ்வு கொடுக்க போறியா இல்ல தோக்க வச்சு அசிங்கப்படுத்த போறியா என சாமியிடம் வேண்டிக் கொள்கிறார். பிறகு மூவரும் ஓட்டு போடும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு உமாபதியை தமிழ் மீட் பண்ணுகிறார் போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கிறதை பார்த்தீர்களா தமிழ். இனிமே நமக்கு ஓட்டு போடுகிறவங்களும் போட மாட்டாங்க எனக் கூற தமிழ் பார்த்தேன் சார் நாம ஜெயிப்போம் நம்பிக்கையோடு இருப்போம் என கூறுகிறார்.
இப்ப கூட நீங்க நல்லதே நினைக்கிறீங்க தமிழ் ஆனா அவங்க இவ்ளோ மட்டமான வேலையை செய்வாங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல என கூறுகிறார் அந்த சமயத்தில் கோதை டைம் உள்ளே வருகிறது அப்பொழுது உமாபதி ஆத்திரம் பொறுக்காமல் அர்ஜுனிடம் கத்துகிறார் அதுமட்டுமில்லாமல் இவ்வளவு கீழ் தரமான வேலை செய்வீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல என திட்டுகிறார் எலக்சன் அசோசியேஷனில் வந்து இப்பொழுது ஏதும் பேச வேண்டாம் எதற்காக இப்படி சண்டை போடுகிறீர்கள் என கூறிவிட்டு அமைதியாக எலக்சன் நடக்கிறது அனைவரும் ஓட்டு போடுகிறார்கள்.
ஓட்டு போட்டு முடிந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கிறது இந்த சமயத்தில் சந்திரகலா வசு இருவரும் பேசிக் கொள்கிறார்கள் அப்பொழுது யார் ஜெயிப்பாங்கன்னு தெரியவே இல்ல ரொம்ப சர்ப்ரைஸா இருக்கு எனக் கூற அப்பொழுது அர்ஜுனனின் மாப்பிள்ளை ஃபோன் செய்து கொண்டு அத்தை தான் ஜெயிப்பாங்க என பேசிக்கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் இதில் தோத்து வடநாட்டுக்கு போய் காயலாங் கடை போடட்டும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சந்திரகலாவுக்கு கோபம் வருகிறது உடனே அர்ஜுன் குடும்பத்தை நீங்க யார் என்ன எதுக்கு வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியும் இதை நான் ராகினி கிட்ட சொன்னாலே போதும் அவளே உங்கள வீட்டை விட்டு துரத்தி விடுவா என கூறுகிறார்கள்.
அப்படி இல்லைங்க நீங்க ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டீங்க என அர்ஜுன் குடும்பம் சொல்ல உடனே ராகினி அந்த சமயத்தில் என்ன என கேட்கிறார் ஆனால் சமைப்பது பற்றி கூறி ராகினியிடம் எதுவும் சொல்லாமல் மழுப்பி விடுகிறார்கள். அடுத்த காட்சியில் ஓட்டு எண்ணிக்கை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அப்பொழுது முதல் சுற்றில் கோதை டீம் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்கள் அதன்பிறகு இரண்டாவது சுற்றில் தமிழரசன் அதிக வாக்குகளை பெற்றார் மூன்றாவது சுற்றிலும் தமிழரசன் அதிக வாக்குகளை பெற்றார்.
இதற்கிடையில் முதல் சுற்றில் அதிக வாக்குகள் இருந்ததால் உடனே அர்ஜுன் மாப்பிள்ளை வெடி வெடிக்கிறேன் என கூற நடேசன் அமைதியாக இருக்க சொல்லுங்கள் எனக் கூறி விடுகிறார். பிறகு ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு அசோசியேஷன் எலக்ஷனில் கோதை டீம் 102 வாக்குகளை பெற்றுள்ளார் அதேபோல் தமிழரசன் 140 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கிறார்கள் இதனால் தமிழரசன் சந்தோஷத்தில் இருக்கிறார். ஆனால் கோதை எப்படி தோத்தோம் என மொழி பிதுங்கி நிற்கிறார் அர்ஜுன் கார்த்தி இனிமே நம்ம மாட்டிப்போம் எனவும் பயத்தில் இருக்கிறார்.
அர்ஜுன் மற்றும் கார்த்திக் இருவரும் செய்த நாரவேலையால் தான் கோதை தோற்று இன்று தனி மரமாக நிற்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.