விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நேற்று எபிசோட் தமிழின் நண்பர் கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார் அவரை தேடி அலைகிறார் தமிழ் எவ்வளவு தேடியும் கிடைக்காத அவர் தமிழ் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துகிறார் அப்பொழுது பின்னாடி இருந்து வந்து அவர் நண்பர் தமிழ் மீது கை வைக்கிறார் உடனே தமிழ் பெருமூச்சு விடுகிறார்.
தமிழின் நண்பர் எனக்கு தெரியும் என் தமிழை பற்றி என கூறுகிறார் அத்துடன் ரொம்ப பசிக்குது வீட்டுக்கு போலாமா என அவரின் நண்பர் கேட்க உடனே வீட்டிற்கு கிளம்பி வருகிறார்கள் வீட்டிற்கு சென்ற தமிழ் தயக்கத்துடன் உள்ளே போகிறார் ஆனால் அவரின் நண்பர் சரஸ்வதி கூப்பிட்டு சாப்பாடு ரெடியா ரொம்ப பசிக்குது என கூற குளித்துவிட்டு தமிழ் சாப்பிட உட்காருகிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது சரஸ்வதியை தமிழின் நண்பர் சாப்பிட சொல்லும்பொழுது கொஞ்ச நேரம் இருங்க என சென்று தாலி செயினை கழட்டி சாமி படத்திற்கு முன்பு வைத்துவிட்டு மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்.
பின்பு தாலிச் செயினை தமிழிடம் கொடுத்து தன் பக்கமுள்ள நியாயங்களை கூறுகிறார் நான் பவுனுக்காக ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை வேலைக்கு போகறதுக்கு ஒரு வழி இருந்தது அதனால் தான் நான் கழட்டவில்லை என கூறுகிறார் சரஸ்வதி எவ்வளவு சொல்லியும் தமிழ் உன் பக்கமுள்ள தவறை ஒத்துக்கொள்ளாமல் நியாயமாக பேசுகிறாயா என கூறி மீண்டும் இரிடேட் செய்கிறார்.
சரஸ்வதி சாப்பிடாமல் நின்று கொண்டிருக்கும் பொழுது தமிழ் வந்து பாய விரித்து போட்டு தூங்க போகிறார் அதைப் பார்த்த சரஸ்வதி உட்கார்ந்து கொண்டு அழுகிறார். அடுத்த நாள் காலை விடிகிறது தமிழ் நண்பர் காய்கறி அனைத்தையும் வாங்கிக் கொண்டு கொடுக்கிறார். தமிழ் சரஸ்வதி மீது இன்னும் கோபமாக இருப்பதை வெளிப்படுத்துகிறார் அதனால் காபி கூட கையில் கொடுத்தப்ப வாங்காமல் கீழே வைத்த உடன் எடுத்து குடிக்கிறார்.
உடனே மதியம் லஞ்ச் சமைத்து எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறேன் என கூற எதுவும் வேணாம் என நிம்மதியா இருக்க விடு என தமிழ் கத்துகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழின் நண்பர் நீ விடுமா என்று கோவமா தான் இருக்கான் எல்லாம் சரியாகிவிடும் என கூறுகிறார் உடனே சரஸ்வதி உங்கள்ட பேசி பிரயோஜனமே கிடையாது நீங்க என்கிட்ட பேச வேணாம் நான் யார்கிட்ட பேசணுமோ அங்க பேசிக்கிறேன் என கிளம்பி போகிறார்.
சரஸ்வதி ஸ்கூலில் இருக்கும் அவங்க அம்மாவிடம் எதுக்காக நான் வேலைக்கு போறத அவர்கிட்ட போய் சொன்னீங்க என சண்டை போடுகிறார் நீ கஷ்டப்படுறது எங்களுக்கு தான் கஷ்டமா இருக்கு உன்னை ஏன் அவர் வேலைக்கு அனுப்புறார் என வாக்குவாதம் செய்கிறார்கள் ஆனால் கடைசியில் நான் வேலைக்கு போவது தமிழுக்கு தெரியாது என புரிய வைக்கிறார் சரஸ்வதி அவங்க அம்மாவிடம்.
அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி என் தமிழ் என்ன கஷ்டப்படுத்த நினைக்க மாட்டாரு நான் வேலைக்கு போவது தெரிஞ்சா அவர் அனுப்ப மாட்டார் என்று தான் நான் சொல்லல வேலையில என்ன நல்ல வேலை கெட்ட வேலை எல்லா வேலையும் நல்ல வேலைதான் உன்ன மாதிரி பேனுக்கு கீழ உக்காந்துகிட்டு செஞ்சா தான் அது வேலையா ஸ்பேனர் புடிச்சா அது வேலை கிடையாதா என அவங்க அம்மாவை கிழித்து தொங்க விடுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.