உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் காவல்துறையினர் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கைகள் செய்து வருகிறார்கள், மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக காவல்துறையினர் போராடி வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகள் கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது, இந்த நிலையில் கொரோனாவின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அங்கு சுற்றி வருகிறார்கள். அவர்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் வடிவில் ஹெல்மெட் அணிந்து மேம்பாலத்தில் விழிப்புணர்வு செய்துள்ளார்.
அந்தப் பகுதிக்கு தேவையில்லாமல் வரும் வாகனங்களை மரித்து நோயின் தீவிரம் குறித்தும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் எச்சரித்து வருகிறார்கள், அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்து செல்லவும் தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்கள்.
இந்தக் காவல் ஆய்வாளர் மேற்கொண்ட விழிப்புணர்வு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
A helmet altered similar to #Corona virus was donned by a police officer in Chennai to spread awareness among motorists to stay home. The art was done by @kinggowtham , a Chennai based artist who has done many innovative campaigns on social issues. #StayAwareStaySafe #StayHome pic.twitter.com/GLuUkGL7fT
— Alby John (@albyjohnV) March 28, 2020