உலகம் முழுதும் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள வருவாய் துறையினரும் உள்ளாட்சி பணியாளர்களும் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். மேலும் இவர்களின் பல்வேறுவகையான முயற்சிகளுக்கு இடையில் வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் கூடுதல் பணி தேவைக்காக ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தன்னர்வத்துடன் வரும் ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 50 வயதுக்கு உட்பட்ட தன்னார்வமுள்ள ஆசிரியர்களை மருத்துவம் சாரா கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.