வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. அதிலும் நேற்றிலிருந்து சென்னையில் லேசான தூறலோடு ஆரம்பித்த மழை கொஞ்சம் கொஞ்சமாக வலுபெற ஆரம்பித்துவிட்டது.
அதனால் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையையும் அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து இன்று சிறிது நேரம் கூட இடைவேளை இல்லாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக மாறி இருக்கிறது.
அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் இன்றி தயார் நிலையில் இருந்த பேரிடர் குழுவும் தற்போது மழைநீர் தேங்காாமல் வெளியேற்றும் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை அக்டோபர் 16ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி செல்போனிலும் அரசு சார்பில் மெசேஜ் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் பொதுமக்கள் உதவிக்காக 1913 என்ற எண்ணை தொடர் ளம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதபோல் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி ட்ரான் மூலம் மக்களுக்கு உணவு விநியோக படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இப்படி கனமழையால் சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அரசு இதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.