தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகைகள்.! லிஸ்ட் பெருசா இருக்கு..

shruthi haasan
shruthi haasan

சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் நடிகைகளை தொடர்ந்து அவருடைய மகன் மகள்கள் சினிமா உலகில் ஈசியாக நுழைந்து விடுகின்றனர். அதில் ஒரு சிலர் நல்ல கதை மட்டும் உள்ள படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்தி உள்ளனர் ஒரு சிலர் காணாமல் போயும் இருக்கின்றனர் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகைகளை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

அதிதி ஷங்கர் : ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்திருந்தாலும் அவருக்கு சினிமாவில் மீது அதிக காதல் இருந்ததால் கார்த்தியின் விருமன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்து அசத்தினார். இப்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா  ஹாசன் : பல இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக இருப்பவர் கமல். அவரைத் தொடர்ந்து அவருடைய இரு மகள்களும் சினிமா உலகில் கால் தடம் பதித்தனர் குறிப்பாக ஸ்ருதிஹாசன் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெத்தை உயர்த்தி தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஆனால்  அக்ஷரா ஹாசன் இப்பொழுதுதான் ரசிகர்கள் மத்தியில் தென்படவே ஆரம்பித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் : இவருடைய அம்மா சினிமா பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது அவரை தொடர்ந்து இவரும் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார். கடைசியாக இவர் நடித்த மாமன்னன் படம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமி : இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பிறகு ஹீரோயின்னாக படங்களில் நடித்தாலும் பெரிய அளவு பிரபலமடையவில்லை அதன் பிறகு சின்னத்திரைகளில் தலை காட்டி ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி : சரத்குமாரின் மகளான இவர் போடா போடி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு திரை உலகில் ஹீரோயினாகவும் வில்லியாகவும் நடித்து வருகிறார் தற்போது தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.

ஐஸ்வர்யா : ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகளான இவர் ஒரு மிகப்பெரிய மாடல் அழகி பட்டத்து யானை என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்யா ரவிச்சந்திரன் : இவரது அம்மா ஒரு நடன கலைஞர் இவரது அப்பாவும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் : இவரது அம்மா அப்பா திரைப்பட உலகில் இருந்தவர்கள் இவரும் சினிமா உலகில் ஈசியாக நுழைந்து விட்டார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார்.