திரையரங்கில் வரிசை கட்டி நிற்கும் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்.! ஆத்தாடி இத்தனை படம் லிஸ்டில் இருக்கா..

tamil up coming movies
tamil up coming movies

Tamil movie : பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் பண்டிகை நாட்களில் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது ஆனால் சமீப காலமாக எப்பொழுது முன்னணி நடிகர்களின் திரைப்படம் வருகிறதோ அன்றுதான் பண்டிகை நாட்கள் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் தொடக்கத்தில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் 2, மாவீரன், ஜெயிலர் என மிகப் பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தது இன்னும் பல பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன அது என்னென்ன என்று இங்கே காணலாம்.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய்தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ  இந்த திரைப்படம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தை அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு.

அயலான்: சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் வெற்றிக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம் அயலான் இந்த திரைப்படம் அறிவியல் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது அதேபோல் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட இருந்தது ஆனால் திடீரென பட குழு அடுத்த பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவித்துள்ளார்கள்.

துருவ நட்சத்திரம்: விக்ரம் நடிப்பில் நீண்ட வருடமாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம் இந்த திரைப்படம் நவம்பர் இறுதியில் வெளியாக இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் புது பொலிவுடன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தில் ரிது வர்மா, சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஜப்பான்: ராஜிமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் தான் ஜப்பான் என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது கொள்ளை கும்பல் தலைவன் ஒருவனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் திருடன் போலீஸ் கதையாக இருந்தாலும் அதனை தன்னுடைய பாணியில் இயக்குனர் ராஜிமுருகன் நையாண்டி நக்கலுடன் சொல்லி இருக்கிறாராம்.

இந்தியன் 2: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படத்தின் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் படத்தின் சில காட்சிகளை பார்வையிட்ட கமல் ஷங்கரை பாராட்டினாராம் இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட இருக்கிறது படக்குழு.

தங்கலான்: அட்டகத்தி மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, ஆகிய திரைப்படத்தின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் பா ரஞ்சித் இவர் தற்பொழுது விக்ரம் அவர்களை வைத்து தங்கலான் திரைப்படத்தை இயக்கி உள்ளார் அதேபோல் இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாக இருக்கிறது.

கேப்டன் மில்லர்: ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் தான் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் மேலும் சிவராஜ்குமார் சந்திப் கிஷான் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது.